தெலங்கானாவில் இன்று காலை பள்ளிப் பேருந்துடன் ரயில் மோதி பயங்கர விபத்து, 20 மாணவர்கள் பலி. வீடியோ இணைப்பு. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, July 24

தெலங்கானாவில் இன்று காலை பள்ளிப் பேருந்துடன் ரயில் மோதி பயங்கர விபத்து, 20 மாணவர்கள் பலி. வீடியோ இணைப்பு.


ஜுலை 24: தெலங்கானாவில் இன்று காலை பள்ளிப் பேருந்துடன் ரயில் மோதி பயங்கர விபத்து, 20 மாணவர்கள் பலி.

தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற பள்ளிப் பேருந்து மீது ரயில் மோதியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாகினர்.

மேடக் மாவட்டம் மசாய்பேட் கிராமத்தில் இன்று காலை 9.10 மணியளவில் இத்துயரச் சம்பவம் நடந்துள்ளது.

காகடியா டெக்னோ பள்ளிக்குச் சொந்தமான பேருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, மசாய்பேட் கிராமம் அருகே ஆளில்லாத ரயில்வே லெவல் கிராசிங்கை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த நான்டெட் - செகந்தராபாத் பயணிகள் ரயில் பேருந்து மீது மோதியது.

இதில் பேருந்து ஓட்டுநர், பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த மாணவர்கள், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து தெலங்கானா முதல்வ கே.சந்திரசேகர ராவ் அதிர்ச்சியும், ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.ஹரீஷ் ராவ் விரைந்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் சந்திரசேகர ராவ், சிறப்பான முறையில் மருத்துவ உதவி அளிக்குமாறு உத்தரவிட்டார். அவருடன் தலைமைச் செயலர் ராஜீவ் சர்மா, டிஜிபி அனுராக் சர்மா ஆகியோரும் இருந்தனர்.

உள்துறை அமைச்சர் இரங்கல்:

ரயில் மோதி பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவத்திற்கு தெலங்கானா உள்துறை அமைச்சர் நைனி நரசிம்ம ரெட்டி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இத்துயரச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் இரங்கல்:

தெலங்கானா விபத்து குறித்து மக்களவையில் பேசிய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, "இந்தச் சம்பவம் மிகவும் துயரமானது, துரதிர்ஷ்டவசமானது. விபத்து குறுத்து மக்களவையில் இன்று பிற்பகல் விளக்கமளிக்கப்படும்" என்றார்.

வீடியோ.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here