ஜுன் 28: சென்னை மவுலிவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த 13 மாடி கட்டிடம் இன்று திடிரென இடிந்து தரைமட்டமானது.
சென்னையில் இன்று பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக, தரமற்ற அடித்தளம் இடிந்து விழுந்திருக்கலாம் எனவும், இடியின் காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
விபத்தின் போது அங்கு பணியில் இருந்த சுமார் 80 தொழிலாளர்கள் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.
தற்போது அங்கு மீட்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை ஒருவரும் இடிபாடுகளுக்கிடையில் இருந்து மீட்கப்படவில்லை.
மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள்.


No comments:
Post a Comment