அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலி ! - BBC

BBC

Tuesday, May 27

அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் பலி !






மே 27: அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் இன்று மாலை கேரளாவை சேர்ந்த பயணிகள் ஏர்வாடியை நோக்கி ஆம்னி பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். பேருந்து அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலை பெரிய ஏரி அருகே சென்றுகொண்டிருக்கும் போது எதிரே இருசக்கர வாகனத்தில் ஆவணத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான விஜி (29), விக்கி (30) ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதினார்கள். 

பேருந்தில் சிக்கிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் தமுமுக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தமுமுக ஆம்புலன்ஸ் இறந்த இரு உடல்களையும் பிரத பரிசோதனைக்காக அதிரை அரசு மருத்துவமனைக்கு எடுத்துசென்றது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிரை போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் விபத்து நடந்த பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

தகவல் மற்றும் புகைப்படம்: அதிரை நியூஸ்

No comments:

Post a Comment