EMERALD LEAGUE 3 இறுதி போட்டியில் மூன்லைட் கிரிக்கெட் அணிக்கு இரண்டாவது இடம். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 8

EMERALD LEAGUE 3 இறுதி போட்டியில் மூன்லைட் கிரிக்கெட் அணிக்கு இரண்டாவது இடம்.


மார்ச் 08: கடந்த சில வாரங்களாக துபாயில் EMERALD LEAGUE 3 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணியும் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதியானது.

இறுதிப்போட்டி

28-02-2014 இறுதிப்போட்டி துபாயில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணிக்கும் அஜிஸ் XI (MOON LIGHT CRICKET VS AZEES XI) நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய மூன்லைட் கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி 16 ஓவருக்கு 156 ரன்களை எடுத்தது. (156 Runs /16 Overs). பிறகு களம் இறங்கிய அஜிஸ் XI அணி 15.1 ஓவர்களில் 157 ரன்களை எடுத்து EMERALD LEAGUE 3 கோப்பையை கைப்பற்றியது.

மூன்லைட் கிரிக்கெட் அணியின் தொடக்க அதிரடி ஆட்டக்காரர்கள் விரைவாகவே ஆட்டம் இழந்ததால் அணியில் ரன்கள் சற்று குறைவாகவே காணப்பட்டது. பின்பு களம் இறங்கிய அணியில் கேப்டன் மஹாதீர் மற்றும் துணை கேப்டன் நவ்தா ஹலீம் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ரன்களை அதிகப்படுத்தினர்.

மூன்லைட் கிரிக்கெட் அணியின் ஆட்டக்காரர்கள் சிறப்பாக பீல்டிங் செய்து அஜிஸ் XI கலங்க வைத்தனர். இறுதியாக கடைசி ஓவர் வரை யார் கோப்பையை வெல்வார்கள் என்ற போட்டி நிலவியது. 15.1 ஓவரில் அஜிஸ் XI 157 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

EMERALD LEAGUE 3 இறுதி போட்டியில் மூன்லைட் கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்தை தட்டிச்சென்றது.

கிரிக்கெட் போட்டியில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடிய அனைத்து சகோதரர்களுக்கும் முத்துப்பேட்டை பிபிசி முத்துப்பேட்டை.org மற்றும் முத்துப்பேட்டை இணைதளங்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 புகைப்படங்கள்:


































   

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here