பிப்ரவரி 18: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தோற்றுவிக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17-ஆம் தேதி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை அவ்வமைப்பினர் கடைப்பிடித்தனர்.
‘மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைவோம்’ என்ற முழக்கத்துடன் சீருடை அணிந்த செயல்வீரர்களின் ஒற்றுமை அணிவகுப்பு, மக்கள் பேரணி, பொதுக் கூட்டங்கள், சமூக சேவைகள் ஆகியன இத்தினத்தில் நடத்தப்பட்டன.
தமிழகத்தின் ராமநாதபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நடத்தப்பட்ட அணிவகுப்பு மற்றும் பேரணியில் காவல்துறை பொதுமக்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை வீசியும் அட்டூழியத்தில் ஈடுபட்டது. இதில் பலர் பலத்த காயமடைந்தனர்.
பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு முறையான அனுமதி பெற்று அவ்வமைப்பினர் பேரணியை தொடங்கிய போது காவல்துறையினர் திடீரென்று அனுமதி மறுத்தனர்.
சில சமூக விரோதிகள் கூட்டத்தில் நுழைந்து போலீசார் மீது கற்களை வீச, கல்வீச்சு சம்பவம் எனக்கூறி காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டினை வீசினர்.
பேரணியை வீடியோ எடுத்த வீடியோகிராபரையும் தாக்கி, பல லட்சம் மதிப்புள்ள 2 நவீன கேமராவை போலீசார் காலால் மிதித்து அடித்து நொறுக்கினர்.
ஏ.டி.எஸ்.பி வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் தாக்கியதில் சுமார் 30 க்கும் மேற்ப்பட்டவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டுள்ளது. பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வந்த மக்களை அவ்வமைப்பினர் பத்திரமாக மீட்டு அனுப்பினர்.
போலீசாரின் தடியடியிலிருந்து பெண்களையும், பொது மக்களையும் காக்க ரத்தம் வழிய தடியடியை வாங்கிய அவ்வமைப்பை சேர்ந்த சிலரின் செயல் அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது. இச்சம்பவம் நடந்த போது, அந்த அமைப்பின் மாநில நிர்வாகிகளையும் போலீசார் தாக்க முற்ப்பட்டனர்.
காயமடைந்த அனைவரும் ராமநாதபுரம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசாரின் இத்தகைய காட்டுமிராண்டி தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக கல்வீச்சில் ஈடுபட்ட சமூக விரோதிகளில் இருவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரித்ததில் காவல்துறையினரின் இன்ஃபார்மர்கள் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்களை பத்திரமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி அனுப்பியது. மேலும் போலீசாரில் சிலரும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதை அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த சம்பவம் காவல்துறையின் திட்டமிட்ட சதிச்செயலாக இருக்குமோ எனவும் பலத்த சந்தேகம் நிலவுகிறது.
வீடியோ







No comments:
Post a Comment