ஜனவரி 23: முத்துப்பேட்டை ரயில் நிலையத்தில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. முத்துப்பேட்டை ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற 2012 முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் பணியாற்றிவந்த ஊழியார்கள் இடமாற்றம் செய்யபட்டுள்ளார். இதனால் கேற்பார் அற்று நிலையில் காணப்படுகிறது. சமூக விரோதிகள் சிலர் அங்கு வந்து மது அருந்தி விட்டு அவ்வழியாக செல்லும் பெண்களை கேழியும் கிண்டல் செய்து தகாத வழியில் நடந்து கொள்வதாவும் புகார் எழுந்துள்ளது.
மேலும் கஞ்சா, மதுபான பொருட்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், பொதுமக்கள் இவ்வழியே செல்ல இயலவில்லை என்றும் கூறிப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
வீடியோ இணைப்பு







No comments:
Post a Comment