டிசம்பர் 28: முத்துப்பேட்டை பங்களா வாசல் மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் டிரைவர் எஸ்.நூர்முஹமது அவர்களின் மனைவியும், என். நத்தர்சா அவர்களின் தாயாரும், கே. ரஹ்மத்துல்லாஹ், எஸ். ஹபீபுர்ரஹ்மான் (நாச்சிகுளம்), முகைதீன் அடுமை இவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா "பஜரியா அம்மாள்" அவர்கள் நேற்று 27-12-2013 காலை 9.30 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்……..
அன்னாரின் ஜனாஸா இன்று 28.12.2013 சனிக்கிழமை முகைதீன் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அறிவிப்பவர். என். நத்தர்ஷா&கே.ரஹ்மத்துல்லாஹ்.
தகவல்:
முத்துப்பேட்டை நியூஸ் மற்றும்
K.S.H.சுல்தான் இப்ராஹீம்.(சுனா இனா)

No comments:
Post a Comment