ஜனவரி 28: புதுத்தெரு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய அந்தோனி ராஜ் தலைமை வகித்தார். கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுல்தான் இப்ராஹீம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சுதந்திர போராட்ட தியாகி டாக்டர். கே.எஸ. முகமது தாவூது INA தேசியக்கொடியினை ஏற்றி வைத்து பேசினார். பின்னர் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.
NEWS PARTNER: முத்துப்பேட்டை.org

No comments:
Post a Comment