டிசம்பர் 27: இன்ஷா அல்லாஹ் .. வரும் பிப்ரவரி இறுதி வாரத்தில் திறப்பு விழா காணக்கூடிய முத்துப்பேட்டை கல்விபேரவையின் புதிய கட்டிட பணிகள் எவ்வாறு நடந்து வருகிறது என்பது பற்றி ஆய்வுமேற்கொள்ளப்பட்டது.
மாணவ, மாணவிகளுக்கு நல்லதொரு தரமான கல்வியினை தந்துக்கொண்டிருக்கும் சென்னை - ரஹ்மத் அறக்கட்டளை சார்பில் இந்த கட்டிடப்பணிகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன.
ஆய்வு மேற்பார்வையில் முத்துப்பேட்டையினை சார்ந்த ஊர் ஜமாத்தார்கள், முக்கிய பிரமுகவர்கள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக முத்துப்பேட்டைக்கு வருகை புரிந்த சன்டிவி - பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜனாப். B.H.அப்துல் ஹமீது அவர்களும் கலந்துக்கொண்டார்கள்.
கட்டிடப்பணிகளை பார்வையிட்ட அப்துல் ஹமீது அவர்கள் கூறுகையில், முஸ்தபா அவர்கள் அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் மக்களும் பயன் பெறும் வகையில் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளார்கள. இன்ஷா அல்லாஹ்.. கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் நானும் பங்கேற்கலாம் என்றும் மேலும் அவர் கூறினார்.
தகவல்: Muthupet EducationCentre

No comments:
Post a Comment