துபாய் குளோபல் வில்லேஜில் முதல் முறையாக தமிழகத்தின் சின்னங்கள் அமைக்கப்பட்டது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 24

துபாய் குளோபல் வில்லேஜில் முதல் முறையாக தமிழகத்தின் சின்னங்கள் அமைக்கப்பட்டது.





டிசம்பர் 24: (DUBAI GLOBAL VILLAGE) துபாய் குளோபல் வில்லேஜில் கடந்த 15ம் தேதி இந்திய பெவிலியன் திறக்கப்பட்டுள்ளது. அதில் ரிப்பன் பில்டிங், சென்ட்ரல் ரயில் நிலைய சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன. துபாயில் வருடந்தோறும் குளோபல் வில்லேஜில் இந்திய பெவிலியன் அமைக்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் இந்திய பெவிலியின் கடந்த 15ம் தேதி மாலை திறந்து வைக்கப்பட்டது. குளோபல் வில்லேஜில் பல்வேறு நாடுகள் தங்களது நாடுகளின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் பெவிலியன்களை அமைத்து வாடிக்கையாளர்களைக் கவர்வதுண்டு. அதேபோல் இந்திய பெவிலியனை இந்திய் கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இ4 என்டர்டெயின்மென்ட் சுனில் பாட்டியா, துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ், துணை தலைவர் ஏ. லியாக்கத் அலி, விழாக் குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, துணைப் பொதுச் செயலாளர் பிரசன்னா, நடன ஆசிரியை கவிதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த ஆண்டு இந்திய பெவிலியன் தமிழகத்தின் முக்கியப் பகுதிகளான ரிப்பன் பில்டிங், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை நினைவு கூறும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வட மாநிலங்களின் நினைவுச் சின்னங்களே இருந்து வந்த நிலையில் துபாய் தமிழ்ச் சங்கத்தின் முயற்சியால் இவ்வாண்டு தமிழக சின்னங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here