ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 10

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி.


மே. 11 : ஐ.பி.எல் போட்டித் தொடரின் 56-வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
ராஜஸ்தான் அணி இதுவரை தான் ஆடிய 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என்ற நிலையில் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் இருந்தது. சென்னை அணி தான் விளையாடிய 13 போட்டிகளில் 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு டிரா என 11 புள்ளிகளுடன் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்தது.

கடந்த ஆட்டத்தில் சென்னை அணியில் விளையாடிய டு பிளிசிஸ், சுப்ரமணியம் பத்ரிநாத் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக மைக் ஹஸ்ஸி, அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். ராஜஸ்தான் அணியில் ஓவைஸ் ஷா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிராட் ஹாட்ஜ் சேர்க்கப்பட்டார். இந்த சீஸனில் ராஜஸ்தான் அணியுடன் சென்னையில் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அஜின்கியா ரகானேவும், ராகுல் டிராவிட்டும் களமிறங்கினர். முதல் பந்தை டிராவிட் எதிர்கொண்டார். களமிறங்கிய சிறிது நேரத்திலேயே மழை பெய்யத் துவங்கியதால், ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஆட்டம் துவங்கியது.
இரண்டாவது ஓவரின் 5-வது பந்தில் டிராவிட் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் கணக்கில் 4 ரன்கள் ஆகும். இவரையடுத்து ரகானேவுடன் ஷேன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். ராஜஸ்தான் அணி 2.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட்டை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்த போது. மீண்டும் மழை குறுக்கிட்டது.
பின்னர் மழை விட்டதால் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரகானே 17 ரன்னிலும், வாட்சன் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணி 8.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 42 ரன்கள் எடுத்திருந்த போது மூன்றாவது முறையாக மழை குறுக்கிட்டது. மழை நின்றதால் பின்னர் ஆட்டம் துவங்கியது.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி வீரர்களால் அதிரடியாக ஆட முடியவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணியால் 126 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
பின்னர் 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் விஜய் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதைத் தொடர்ந்து ரெய்னா 23 ரன்னிலும், பிராவோ 10 ரன்னிலும், ஹசி 23 ரன்னிலும், டோனி 10 ரன்னிலும், ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் சென்னை அணி 84 ரன் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின்னர் ஜோடி சேர்ந்த மோர்க்கல்லும், அனிருதா ஸ்ரீகாந்தும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டம் சென்னை அணியின் பக்கம் திரும்பியது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய இருவரும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
சென்னை அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. மோர்க்கல், அனிருதா ஆகிய இருவரும் தலா 6 பந்துகளை சந்தித்து, தலா 2 சிக்சர்களுடன், தலா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியுடன் 13 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் மீண்டும் 4வது இடத்தைப் பிடித்ததுடன், அடுத்த சுற்று வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here