மே 10: முத்துப்பேட்டை தனித்தாலுக்காவாக அமைக்கப்படும் என்று திமுக அரசாங்கம் 28.2.2011 அன்று அறிவித்து இருந்தது. தற்போது ஆட்சியில் உள்ள அதிமுக அரசாங்கம் அதற்கான எந்தவிதமாக நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதினை கண்டித்தும், விரைவில் முத்துப்பேட்டையினை தனித்தாலுக்காவாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகம் முன்பாக 10.5.12 காலை 10.30 மணியளவில் திமுக கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் தலைமையினை, பூண்டி. கே. கலைவாணன் – திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் – அவர்கள் நிகழ்த்த, முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன், ஒன்றியச்செயலாளர் ந.உ.சிவசாமி ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.
மாவட்ட துணைச்செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் வரவேற்புரையினை ஆற்ற, கண்டன உரையினை ஏ.கே.எஸ்.விஜயன் – நாகை நாடாளுமன்ற உறுப்பினர் – அவர்கள் ஆற்றினார்கள்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஒன்றியச்செயலாளர்கள் பால.ஞானவேல், ஜி.வி.அன்பரசு, முன்னாள் எம்.பி.மகாலிங்கம், நகரச்செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன் மற்றும் ஏராளமான திமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் என கட்சி பாகுபாடின்றி அனைவரும் கலந்துக்கொண்டனர்.

No comments:
Post a Comment