IPL கிரிக்கெட் இன்று: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 10

IPL கிரிக்கெட் இன்று: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்


ஏப்ரல். 10- காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்துள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சிடம் 8 விக்கெட்டில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சிடம் 22 ரன்னில் தோற்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது 3-வது ஆட்டத்தில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது. கொல்கத்தா அணி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.
மோசமான பேட்டிங்கால் அந்த அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்றது. மனோஜ் திவாரி ஒருவரே சிறப்பாக ஆடி வருகிறார். மெக்கல்லம், காலிஸ், கேப்டன் காம்பீர், யூசுப் பதான் ஆகியோரது அதிரடி ஆட்டம் எடுபடவில்லை.
வங்காள தேச முன்னாள் கேப்டன் சகிப் அல் ஹசனுக்கு இன்றைய ஆட்டத்தில் காம்பீர் வாய்ப்பு கொடுப்பார். பெங்களூர் அணி பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணியை தோற்கடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கடுமையாக போராட வேண்டும்.
பெங்களூர் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் இன்று விளையாடுவார் என்று தெரிகிறது. அவருக்கு பதிலாக யார் நீக்கப்படுவார் என்பதுதான் கேள்வி.
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி 20 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மெக்டோனால்டு, டிவில்லியர்ஸ், கேப்டன் வெட்டோரி, முரளிதரன் ஆகியோர் விளையாடினார்கள். இவர்கள் அனைவருமே முதல் ஆட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள்.
கிறிஸ் கெய்ல், தில்சான் அணியில் இடம் பெறுவதால் யாரை நீக்குவது என்பதில் வெட்டோரி திணறிப் போய் உள்ளார். பெங்களூர் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here