இந்திய கடலோரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Wednesday, April 11

இந்திய கடலோரங்களில் சுனாமி எச்சரிக்கை வாபஸ்

இந்தோனேஷியாவில் இன்று மதியம் சுமத்ரா தீவை மையம் கொண்டு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவானது. இதையடுத்து இந்தோனேஷியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில் ஹவாய் தீவில் அமைந்துள்ள பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் இந்தோனேஷியால் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து கூறியதாவது,

இந்தோனேஷியாவில் இன்று மதியம் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களும் சுனாமியை ஏற்படுத்தக்கூடிய நிலநடுக்கங்கள் இல்லை. அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கக்கூடிய நிலநடுக்கங்களே.

இந்நிலநடுக்கத்தால் இந்தோனேஷியாவில் உள்ள கடற்கரை பகுதிகளில் பாதிப்பு இருக்கும். தற்போது அரை மணி நேரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சுனாமி ஏற்படுமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

இந்த நிலநடுக்கத்தால் சுமார் அரை மீட்டரிலிருந்து 1 மீட்டர் அளவுக்கே சுனாமி அலைகள் எழும்பும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் உள்ளிட்ட இந்திய கடற்கரையோர பகுதிகளில் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை.

இருப்பினும், சர்வதேச கடல் பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இந்திய கடல் பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் எனவும் அம்மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுமத்ரா தீவு பகுதியில் சுனாமி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதங்கள் எதுவும் தகவல் அறியப்படவில்லை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here