விரைவில் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் மத்திய அரசு அறிவிப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 8

விரைவில் தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் மத்திய அரசு அறிவிப்பு


ஏப்ரல்.8 -மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் புதுப்பிக்கத் தக்கவல்ல எரிசக்தி குறித்த சர்வதேச கருத்தரங்கத்தின் நிறைவு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி நாராயணசாமி பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து தற்போது 100 மெகாவாட் மின்சாரம் பகலிலும், 750 மெகாவாட் மின்சாரம் இரவிலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை போக்க கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதை தொடர்ந்து பகலில் 200 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய மின்சாரத்துறை அமைச்சர் சதீஷ்குமார் ஷிண்டேயிடம் வலியுறுத்தியுள்ளேன். விரைவில் கூடுதல் மின்சாரம் தமிழகத்திற்கு வழங்கப்படும். கூடங்குளத்தில் மேலும் 4 அணு உலை அமைக்கப்பட உள்ளது.
இவற்றில் முழுமையாக உற்பத்தி தொடங்கும்போது, தமிழகத்திற்கு 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். இங்கு அணு சக்தி ஒழுங்காற்று ஆணைய குழு விரைவில் ஆய்வு செய்ய இருக்கிறது. அதன் பிறகு முழு வீச்சில் மின் உற்பத்தி தொடங்கும்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here