ஏப்ரல் 11: இந்தோனேஷியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 8.9 ஆக பதிவானது. இதையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது மேலும் 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகம் வரை உணரப்பட்டது.
தமிழகத்திலுள்ள கோடியக்கரை, நீலகிரி, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதால் சென்னையில் வீடு மற்றும் அலுவலகங்களில் உள்ளவர்கள் அனைவரும் சாலைக்கு வந்து குவிந்தனர். மேலும் தொலைபேசி, செல்போன் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் துண்டிக்கப்பட்டன.
இந்தோனேஷியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், தமிழகத்திலும் கடற்கரையோர மாவட்டங்களில் சுனாமி வருமோ என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ளனர்.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி இந்தோனேஷியாவில் இதே பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவிலான மிக பயங்கர நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தமிழகம், இலங்கை உள்பட உலகம் முழுவதும் 2.3 லட்சம் பேரை பலி கொண்டது நினைவுகூறத்தக்கது.
இப்போதும் இந்த நிலநடுக்கத்தால் வங்கக் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள 28 நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலநடுக்கத்தை இலங்கை, தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசியாவின் பல நாடுகளி்லும் மக்கள் உணர்ந்துள்ளனர். முன்னதாக இந்த நிலநடுக்கத்தின் அளவு 8.9 ரிக்டராக இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இது 8.7 ரிக்டர் அளவுக்கே இருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

BREAKING NOW

No comments:
Post a Comment