சென்னையில் 7 இடங்களில் புதிதாக தானியங்கி நடை மேம்பாலங்கள் - BBC

BBC

Post Top Ad

Responsive Ads Here

Sunday, April 8

சென்னையில் 7 இடங்களில் புதிதாக தானியங்கி நடை மேம்பாலங்கள்

ஏப்ரல்.8- சென்னையில் போக்கு வரத்து நெரிசல் அதிகத் உள்ள சாலைகளில் ரோட்டை கடப்பதற்காக நடை மேம்பாலங்கள் உள்ளன. இதில் பொது மக்கள் ஏறி நடந்து செல்ல சிரமப்படுவதை அறிந்து நுங்கம்பாக்கம் உள்பட சில நடை மேடையில் “லிப்ட்” வசதியை அறிமுகப்படுத்தினர். ஆனாலும் முழு அளவில் இது செயல்படுவதில்லை. தற்போது சென்னையில் 7 இடங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் எஸ்க லேட்டருடன் கூடிய நவீன நடை மேம்பாலங்களை கட்ட மாநில நெடுஞ்சாலைதுறை திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு எஸ்கலேட்டரும் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. தரமணி சாலையில் அமெரிக்கன் பள்ளி அருகே, பேபி நகர் பஸ் நிறுத்தம், வேளச்சேரி சாலையில் கேப் ஓட்டல் அருகே, அண்ணா நகர் மேற்கில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி சந்திப்பு, பூந்த மல்லி நெடுஞ்சாலையில் வைஷ்ணவ் கல்லூரி முன்பு, தாம்பரம் சானடோரியம் காசநோய் ஆஸ்பத்திரி முன்பு, தாம்பரம் மெப்ஸ் வளாக சந்திப்பு ஆகிய 7 இடங்களில் இந்த நடை மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இதுபற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:-
சென்னையில் மணிக்கு 10 ஆயிரம் வாகனங்கள் கடக்கும் இடங்களில் பொது மக்களின் வசதிக்காக நடை மேம்பாலம் கட்டப்படுகிறது. இதில் சாலைகளில் 600 முதல் 1000 பேர் கடக்கும் பகுதியை தேர்ந்தெடுத்து நடைமேம்பாலம் கட்டுகிறோம். அந்த வகையில் 7 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நவீன நடை மேம்பாலங்கள் கட்டப்பட்ட உள்ளது. ஒவ்வொரு எஸ்கலேட்டரும் மேற்கூரையுடன் கூடிய 16 அடி ( 5.மீ) அகல நடைபாதையாக அமைக்கப்படும். இதில் ஏறுவதற்கு எளிதான 10 அடி அகல சாய்தளங்களும், இருபுறமும் தானியங்கி படிக்கட்டுகளும் அமையும்.
ஒளி புகக்கூடிய வெப்பம் தாக்காத நவீன பாலி கார்பனேட் தகடுகளால் ஆன மேற்கூரை அமைக்கப்படும். நடைமேம்பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் இட மாற்றம் செய்து மக்கள் எளிதாக வந்து செல்ல வசதி செய்யப்படும்.ஏப்.8-
சென்னையில் போக்கு வரத்து நெரிசல் அதிகத் உள்ள சாலைகளில் ரோட்டை கடப்பதற்காக நடை மேம்பாலங்கள் உள்ளன. இதில் பொது மக்கள் ஏறி நடந்து செல்ல சிரமப்படுவதை அறிந்து நுங்கம்பாக்கம் உள்பட சில நடை மேடையில் “லிப்ட்” வசதியை அறிமுகப்படுத்தினர். ஆனாலும் முழு அளவில் இது செயல்படுவதில்லை. தற்போது சென்னையில் 7 இடங்களில் உலக வங்கி நிதி உதவியுடன் எஸ்க லேட்டருடன் கூடிய நவீன நடை மேம்பாலங்களை கட்ட மாநில நெடுஞ்சாலைதுறை திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு எஸ்கலேட்டரும் ரூ.4 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. தரமணி சாலையில் அமெரிக்கன் பள்ளி அருகே, பேபி நகர் பஸ் நிறுத்தம், வேளச்சேரி சாலையில் கேப் ஓட்டல் அருகே, அண்ணா நகர் மேற்கில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி சந்திப்பு, பூந்த மல்லி நெடுஞ்சாலையில் வைஷ்ணவ் கல்லூரி முன்பு, தாம்பரம் சானடோரியம் காசநோய் ஆஸ்பத்திரி முன்பு, தாம்பரம் மெப்ஸ் வளாக சந்திப்பு ஆகிய 7 இடங்களில் இந்த நடை மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
இதுபற்றி நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:-
சென்னையில் மணிக்கு 10 ஆயிரம் வாகனங்கள் கடக்கும் இடங்களில் பொது மக்களின் வசதிக்காக நடை மேம்பாலம் கட்டப்படுகிறது. இதில் சாலைகளில் 600 முதல் 1000 பேர் கடக்கும் பகுதியை தேர்ந்தெடுத்து நடைமேம்பாலம் கட்டுகிறோம். அந்த வகையில் 7 இடங்களில் எஸ்கலேட்டர் வசதியுடன் கூடிய நவீன நடை மேம்பாலங்கள் கட்டப்பட்ட உள்ளது. ஒவ்வொரு எஸ்கலேட்டரும் மேற்கூரையுடன் கூடிய 16 அடி ( 5.மீ) அகல நடைபாதையாக அமைக்கப்படும். இதில் ஏறுவதற்கு எளிதான 10 அடி அகல சாய்தளங்களும், இருபுறமும் தானியங்கி படிக்கட்டுகளும் அமையும்.
ஒளி புகக்கூடிய வெப்பம் தாக்காத நவீன பாலி கார்பனேட் தகடுகளால் ஆன மேற்கூரை அமைக்கப்படும். நடைமேம்பாலம் அருகே உள்ள பஸ் நிறுத்தம் இட மாற்றம் செய்து மக்கள் எளிதாக வந்து செல்ல வசதி செய்யப்படுகின்றது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here