ஆஸ்திரேலியாவில் கடும் நிலநடுக்கம் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, March 24

ஆஸ்திரேலியாவில் கடும் நிலநடுக்கம்


மார்ச் 24: ஆஸ்திரேலியாவில் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்படாத அளவிற்கு 5.6 ரிக்டர் அளவு கோலில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி அதிக மக்கள் வசிக்காத பகுதி என்பதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இந்திய நேரப்படி இன்று மதியம் 1.25 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எப்போதுமே ஆஸ்திரேலியாவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில்தான் நிலநடுக்கம் ஏற்படும். இதனால் பாதிப்புகள் ஏதும் இருக்காது.
ஆனால் இம்முறை மத்திய ஆஸ்திரேலியாவிலுள்ள நிலப்பகுதியில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இம்முறை 5.6 ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உயிர்ச்சேதம் ஏதும் இருக்காது எனத்தெரிகிறது.
இதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 1.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் புவியியல் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here