முத்துப்பேட்டை கல்வி பேரவையின் அறிவிப்பு - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, February 26

முத்துப்பேட்டை கல்வி பேரவையின் அறிவிப்பு





அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

பாரம்பரியமிக்க நமது முத்துப்பேட்டை குத்பாபள்ளிவாசல் அல்லாஹ்வின் அருளால் புதுப்பொலிவுடன் சீரோடும் சிறப்போடும் கடந்த 30.12.2011 அன்று திறக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ் ..! இதற்காக பாடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது குத்பா பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் உள்ள இடத்தை முத்துப்பேட்டை கல்வி பேரவையின் கல்வி பணிகளுக்காக வழங்கப்படும் என குத்பா பள்ளி ஜமாஅத் நிர்வாகத்தால் இரு மறை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கும் என் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

இன்ஷா அல்லாஹ்.. விரைவில் அழகிய முறையில் முத்துப்பேட்டை கல்வி பேரவைக்கான சேவை மையத்தை இந்த இடத்தில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இக்கல்வி பேரவை மூலம், ஏராளமான கல்வி பணிகளும் சேவைகளும் வழிகாட்டல்களும் ஏற்கனவே நடைபெற்று வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். எதிர் வரும் காலங்களில் இதை இன்னும் சிறப்பாக செய்திடவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளோம்.

பொதுவாகவே, கல்வியில் பின்தங்கிய சமூகமாக நாம் உள்ளோம் என்பதை நீதிபதி ராஜேந்திர சச்சார் அறிக்கையில் குறிப்பிடப்ட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நமதூர் மக்கள் கல்வியில் மிகவும் பின்னடைவில் உள்ளோம் என்பது மறுக்கவியலாத ஒன்றாகும்.

எனவே, கல்வி விழப்புணர்வு பெறுவது நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் மார்க்கக் கடமையும் ஆகும். ஆதற்காக ஏற்படுத்தப்பட்ட சேவை நிறுவனமே முத்துப்பேட்டை கல்வி பேரவை. இப்பேரவை கல்வி|பணிக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டு வருகிறது.

தன்னார்வம் கொண்ட பெரியவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள் ஆகியோர் இப்பணி சிறக்க ஒத்துழைப்பும் நல்லாதரவும் தந்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாஹ் நம் எண்ணங்களையும் செயல்களையும் ஈருலகிலும் ஏற்றுக்கொள்வானாக..!

வஸ்ஸலாம்

இப்படிக்கு
எம்.ஏ. முஸ்தபா
(நிறுவனர் – சென்னை ரஹ்மத் அறக்கட்டளை)
Cell: 91 9940067000 / 659619 0125
E.mail : musthafa@agccapital.com.sg

நன்றி: முத்துப்பேட்டை.org

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here