3 நாடுகள் கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 25

3 நாடுகள் கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்



பிப். 25 - மூன்று நாடுகள் கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் நாளை ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த போட்டியில் இலங்கை ஆஸ்திரேலியாவை தோற்கடித்து 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 49.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நேற்றுடன் 9 லீக் ஆட்டங்கள் முடிந்தது. இதில் எந்த அணியும் இறுதிப் போட் டியில் நுழையும் வாய்ப்பை பெறவில்லை. தொடக்கத்தில் புள்ளிகள் பட்டியலில் பின்தங்கிய நிலையில் இருந்த இலங்கை மளமளவென்று வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் பின்தங்கி இருக்கிறது.
இந்த நிலையில் 10-வது லீக் போட்டி நாளை தொடங்குகிறது. சிட்னியில் நடைபெறும் இந்தப் போட்டியில் இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமானால் இந்தியா நாளைய போட்டியில் வெற்றி பெற்று அடுத்து 28-ந் தேதி நடைபெறும் இலங் கையுடனான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது.
எனவே நாளைய ஆட்டம் இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? என்ற நிலையில் போராட்டமாக இருக்கும். ஆஸ்திரேலியாவுடன் தோற்றால் இறுதிப் போட்டி வாய்ப்பை இழந்து விடும். எனவே நாளைய போட்டியில் இந்தியா கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
அணியில் தற்போது கேப்டன் டோனிக்கும், ஷேவாக்குக்கும் இடையே கருத்துவேறுபாடு நிலவுகிறது. அதை விடுத்து உலக கோப்பையில் ஆடியது போல் இந்திய வீரர்கள் ஒற்றுமையுடன் விளையாட முன்வர வேண்டும்.
முந்தைய ஆட்டங்களில் சீனியர் வீரர்கள் தெண்டுல்கர், காம்பீர், ஷேவாக் ஆகியோர் சுழற்சி முறையில் அணியில் இடம்பெற்றனர். இது கடும் விமர்சனத்துக்கு ஆளானது. எனவே நாளை டோனி என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை.
தற்போதைய நிலையில் பேட்டிங்கில் இந்தியா பலவீனமாக உள்ளது. அதை சரி செய்ய வேண்டும். அதே சமயம் ஆஸ்திரேலியா நேற்று இலங்கையிடம் தோற்றதால் நாளை போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் அந்த அணியுடன் கடுமையாக போராடும். அதை இந்தியா எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
எனவே நாளைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும். போட்டி காலை 8.50 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

Australia v India at Sydney 
Feb 26, 2012 (14:20 local | 03:20 GMT | 07:20 GST)
India v Sri Lanka at Hobart 
Feb 28, 2012 (14:20 local | 03:20 GMT | 07:20 GST)
Australia v Sri Lanka at Melbourne 
Mar 2, 2012 (14:20 local | 03:20 GMT | 07:20 GST)
1st Final: TBA v TBA at Brisbane 
Mar 4, 2012 (13:20 local | 03:20 GMT | 07:20 GST)
2nd Final: TBA v TBA at Adelaide 
Mar 6, 2012 (13:50 local | 03:20 GMT | 07:20 GST)

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here