செப்டம்பர் 11: துபையில் எமிரேட்ஸ் டவர் பில்டிங்கில் 'சர்வீஸ் 1' என்ற செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தில் உருவான, வாட்ஸன் (artificial intelligence technology, Watson) எனப்பெயரிடப்பட்டள்ள தானியங்கி இயந்திர சேவை மையத்தை திறந்து வைத்தார் துபையின் ஆட்சியாளர் ஷேக் முஹமது அவர்கள்.
இந்த இயந்திர தானியங்கி (ரோபோ) சேவை மையத்தின் மூலம் அரசின் 100 வகையான சேவைகளை வாடிக்கையாளர்களே சுயமாக செய்து கொள்ள முடியும். இந்த ரோபோ சேவை மையத்துடன் 14 அரசு நிறுவனங்களும், 8 அமைச்சின் பொது சேவை நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஸ்மார்ட் திட்டத்தின் அறிமுகத்தினால் அரசு சேவை மையங்களில் வாடிக்கையாளர்கள் காத்திருப்பது குறையும். ஸ்மார்ட் தொடுதிரையுடன் ஆங்கிலம் மற்றும் அரபியில் இதில் சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த ரோபோவை ஐபிஎம் மற்றும் துபையின் முபாதல் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.
குறிப்பாக, இந்த ரோபோ சேவையில் Mabrook Ma Dabrt எனும் திருமண ஒப்பந்த சேவையும், Mabrook Ma Yak எனும் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான சேவையும், Employment எனும் திட்டத்தின் கீழ் 4 வகையான சேவைகள் கதம்பமாக (Service package) வழங்கப்படுகின்றன. அதில் 50க்கு குறைவான ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் தாங்களே நேரடியாக விசா சம்பந்தப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் செய்து கொள்ளலாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்- அதிரை நியூஸ்
No comments:
Post a Comment