ஜூலை 08: துபையின் நெரிசலான போக்குவரத்து மிகுந்த சாலைகளில் நாயிஃப் சாலையும் ஒன்று. இந்த சாலையில் மட்டும் தினமும் சராசரியாக 13,000 பஸ் பயணிகள் என மாதம் ஒன்றுக்கு சராசரியாக 394,000 பயணிகள் பயணிக்கின்றனர். இந்த நாயிஃப் சாலையை பராமரிப்பு பணிகளுக்காக சுமார் 1 மாத காலத்திற்கு போக்குவரத்திற்கு மூட திட்டமிடப்பட்டுள்ளதால் நாயிஃப் ஜங்ஷன்-2 மற்றும் புரூஜ் நஹர்-2 ஆகிய பஸ் ஸ்டாப்களை பயணிகள் உபயோகப்படுத்த முடியாது.
இந்த சாலையில் உள்ள பஸ் ஸ்டாப் பயணாளிகளின் நலனை கருத்திற்கு கொண்டு தற்காலிகமாக புதிய சுற்றுப்பேருந்துகள் விடப்படவுள்ளன. இன்று முதல் இந்தப் பேருந்துகள் 15 நிமிடத்திற்கு ஒருமுறை என நாள் முழுவதும் சுற்றி வந்து சேவை வழங்கும். மெட்ரோ யூனியன் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த சுற்றுப்பேருந்துகள் நாயிஃப் பார்க், நாயிஃப் ஜங்ஷன்-1, புரூஜ் நஹர்-1, அல் நகல் வழியாக மீண்டும் மெட்ரோ யூனியன் ஸ்டேஷனை வந்தடையும்.
No comments:
Post a Comment