ஜனவரி 14: நாளை முதல் 3 தினங்களுக்கு பொங்கலை முன்னிட்டு முத்துப்பேட்டை அலையாத்தி காடுக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை.
முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டுகள் முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் வசதிக்காக ஆசாத் நகர் மற்றும் ஜாம்புவானோடை படகுத்துறையில் ஏராளமான படகுகள் தயார் நிலையில் எந்த நேரத்திலும் இருப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பண்டிகை தினத்தன்று சுற்றுலா பயணிகள் காற்றுக்குள் சென்றிருக்கும்போது மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து குறிப்பிட்ட பண்டிகை தினங்களில் வனத்துறையினர் காட்டுக்குள் செல்ல தடை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முத்துப்பேட்டை வனத்துறை வன அலுவலர் அய்யூப்கான் கூறுகையில்: வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க காவல் துறை மற்றும் வனத்துறையினர் முத்துப்பேட்டை அலையாத்தி காடு பகுதியில் ரோந்து மற்றும் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட உள்ளனர். அதனால் பலத்த போலீஸ் போடப்பட்டுள்ளது.
மேலும் பிரச்சனைகள் மற்றும் அசம்பாவிதங்கள் தடுக்கும் பொருட்டு சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வரும் பொங்கலை முன்னிட்டு வரும் 15,16,17 ஆகிய தேதிகளில் மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டுக்குள் சுற்றுலா செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள பொதுமக்கள் காட்டுக்குள் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும், எங்களுக்கு ஒத்தழைப்பு தரவும் வேண்டுகிறோம். இவ்வாறு கூறினார்.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment