டிசம்பர் 30: முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து SDPI கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாக சீர்க்கேட்டை கண்டித்து SDPI கட்சியின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை (29-12-2015) முத்துப்பேட்டை பேரூராட்சி முன்பு நடந்தது.
முத்துபேட்டையில் உள்ள பேட்டை சாலை, மெயின்ரோட்டின் சாலை ஆகியவையை உடனே சரி செய்ய வலியுறுத்தியும்,தெருக்களில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறபடுத்த கோரியும், மழை காலத்தில் தெருக்களில் தேங்கி நிற்கும் தண்ணீர்களை அப்புறபடுத்த கோரியும், சுகாதார சீர்க்கேட்டை கண்டித்தும் SDPI கட்சி சார்பாக நகர தலைவர் சேக்முகைதீன் தலைமையில் மாபொரும் கண்டன ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.
இதில் SDPI கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் அபுபக்கர் சித்திக், மற்றும் SDPI கட்சி திருவாரூர் மாவட்ட பொதுச்செயளார் நெய்னா முகம்மது ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இறுதியில் நகர துணை தலைவர் நன்றியுரையாற்றினார்.இதில் ஆட்டோ.கார் ஓட்டுனர்கள் கட்சியின் செயல்வீரர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment