டிசம்பர் 23: முத்துப்பேட்டை அடுத்து ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கிய போது அரசு பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைந்தது.
முத்துப்பேட்டை செம்படவான்காடு ரயில்வே கேட் அருகில் பட்டுக்கோட்டையிலிருந்து முத்துப்பேட்டைக்கு அரசு பேருந்து வந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் பேருந்து ஏறி இறங்கியது. அந்த அதிர்வில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து கொட்டியது. இதனால் என்ன நடந்தது என்று அறியாமல் அதிர்ச்சியடைந்து பேருந்தை டிரைவர் நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment