நவம்பர் 25: முத்துப்பேட்டை பேரூராட்சியில் குடியேறும் போராட்டம் வடிகால் வசதி இல்லாததால் வீடுகளில் மழைநீர்.
வடிகால் வசதி இல்லாததால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை அகற்றாததால் முத்துப்பேட்டை பேரூராட்சியில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.
முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ரஹ்மத் நகரில் மேற்கு சாலை மற்றும் கிழக்கு சாலை நடுவே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.
இருபுறமும் சிமென்ட் சாலைகள் அமைக்கப்பட்டதால் இப்பகுதி தாழ்வாக உள்ளது. இந்த பகுதியில் வடிகால் வசதி கிடையாது. இதனால் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி குடியிருப்புக்குள் புகுந்து வருகிறது. இதனால் இப்பகுதி சாலையை உயர்த்தி சிமென்ட் சாலை அமைத்து வடிகால்வசதி ஏற்படுத்தி தரவேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது வரை பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஒரு மாத மாக இந்த பகுதியில் மழை நீர் தேங்கிகுளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் அதே பகுதியில் வசிக்கும் சவுந்தரராஜன், மல்லிகா, செந்தில், தேவி, செல்வம், சக்திவேல் ஆகியோரது வீட்டுக்குள் மழை நீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் தங்களது உறவினர் வீடுகளில் தங்கி வருகின்றனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரூராட்சி நிர்வாகத்திடம் பொது மக்கள் தெரிவித்துமும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பேரூராட்சியில் குடியேற பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சவுந்தரராஜன் கூறுகையில், 5 ஆண்டுகளாக இப்பகுதியில் சாலை வசதி, வடிக்கால் வசதி கேட்டு போராடிவருகிறோம். கலெக்டர் வரை புகார் மனு அனுப்பியுள்ளேன். எந்த பயனும் இல்லை. எங்கள் பகுதியை வேண்டுமென்றே பேரூராட்சி நிர்வாகம் புறக்கணிக்கி றது. நாங்கள் குடியிருக்க வழியின்றி தவிக்கிறோம்.
அதனால் விரைவில் நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் பேரூராட்சியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். எங்களுக்கு இதை விட்டால் வேறுவழி தெரியவில்லை என்றார்.
இது குறித்து மல்லிகா கூறுகையில், ஒவ்வொரு மழைகாலமும் இதே நிலையைதான் அனுபவித்து வருகிறோம்.
வீடுகள் இருந்தும் குடியிருக்க முடியாமல் அவதிப்படுகிறோம். எந்நேரமும் வீட்டுக்குள் இருக்கும் தண்ணீரை வெளியேற்றி கொண்டே இருப்பது தான் எங்களுக்கு வேலை. எங்களது குழந்தைகளை உறவினர் வீட் டில் தங்க வைத்துள்ளோம். வீட்டுக்குள் கட்டில் போட்டு அதன் மீது தான் அமர்ந்திருக்க வேண்டியநிலை உள்ளது என்றார்.
No comments:
Post a Comment