நவம்பர் 25: முத்துப்பேட்டை செட்டிக்குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி அளவீடு நேற்று செய்யப்பட்டது. அப்போது போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பட்டரைக்குளத்தில் நடந்த முறைக்கேடான பணிகளை எதிர்த்தும் அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முகம்மது மாலிக் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறை கேடாக நடந்த பணி மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன் குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில், பள்ளிவாசல் உட்பட ஏராளமான குடியிருப்புகள் அகற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் கூடுதலாக தமிழத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் தமிழக அரசு கண் ட றிந்து அகற்ற வேண்டும். இதற்கு தாசில்தார் தலைமையில் குழு அமைக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தாரை தலைவராக கொண்டு புதிய சட்டத்தை பிறப்பித்து அனைத்து வருவாய் அலுவலகங்களுக்கும் தமிழக அரசு சர்குலர் அனுப்பியது.
இந்த ஆணையைபின் பற்றும் விதமாகவும் பட்டரைக்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றியதின் எதிரொலியாக மீண்டும் முகம்மது மாலிக் கடந்த ஜனவரி மாதம் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள செக்கடிகுளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென திருத்துறைப்பூண்டி தாசில்தாருக்கு புகார் மனு அனுப்பியிருந்தார். 2 மாதமாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மன்னார்குடி ஆர்.டி.ஓ, மாவட்ட வருவாய் அலுவலருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கலெக்டருக்கு முகம்மது மாலிக் மனு அனுப்பினார். அதில் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடருவேன் என்று 2 மாதங்களுக்கு முன் மனு அனுப்பிருந்தார்.
இதை தொடர்ந்து செக்கடிகுளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் செக்கடிக்குளத்தை மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வசுரப்பி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடு பணிகளை மேற்கொண்டனர். இதில் 40க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 முறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் யாரும் ஆக்கிரமிப்பு களை அகற்ற முன் வரவில்லை.
இதையடுத்து நேற்று காலை முத்துப்பேட்டை செக்கடிகுளத்துக்கு திருத்துறைப்பூண்டி தாசில்தார் பழனிவேல் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாராயணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் முருகேஷ் மற்றும் சர்வேயர்கள் சென்று இறுதி அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், வேதரத்தினம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment