திருச்சி வந்த விமானஇன்ஜினில் பறவை சிக்கியதில் 152 பயனிகள் உயிர் தப்பினார் - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, November 9

திருச்சி வந்த விமானஇன்ஜினில் பறவை சிக்கியதில் 152 பயனிகள் உயிர் தப்பினார்


நவம்பர் 09: இலங்கையில் இருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான இன்ஜினில் பறவை சிக்கியது. இதில் அதிர்ஷ்டவசமாக 152 பயணிகள் உயிர் தப்பினர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் திருச்சி விமானநிலையத்துக்கு மதியம் 3.30 மணிக்கு வந்து 4.05 மணிக்கு புறப்பட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல திருச்சி விமான நிலையத்திற்கு வந்த லங்கன் விமானத்திற்கு ரன்வேயில் இறங்க சிக்னல் தரப்பட்டது. ரன்வேயில் இறங்க முயற்சித்தபோது பறவை ஒன்று விமானத்தின் இறக்கையில் பட்டு இன்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டது.

இதை கவனித்த பைலட் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் விமானத்தில் இருந்த 152 பயணிகள் நிம்மதியடைந்தனர்.
தரையிறக்கப்பட்ட விமானம் விமானம் நிற்கும் தளத்திற்கு கொண்டு வரப்பட்டு இன்ஜின் பகுதியில் சிக்கியிருந்த பறவையை லாவகமாக பொறியாளர்கள் அகற்றினர். பின்னர் விமானம் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி விமானநிலையத்தில் தரையிறங்க முயன்ற மலேசியா விமான இன்ஜினிலும் பறவை சிக்கியது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here