முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மத்தியில் மீண்டும் ஓரட்டி சுடும் பழமை திரும்புகிறது ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 7

முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மத்தியில் மீண்டும் ஓரட்டி சுடும் பழமை திரும்புகிறது !





பிப்ரவரி 07: முத்துப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மத்தியில் மீண்டும் ஓரட்டி சுடும் பழமை திரும்புகிறது !
அந்த காலத்தில் இஸ்லாமியர்கள் மத்தியில் ஒருவர் இறந்து விட்டால் 40 நாட்களுக்குள் வாரத்திற்கு இரண்டு நாள் வீட்டில் ஓரட்டி சுட்டு சீனி வைத்து மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த பழக்கம் நாளடைவில் மறைந்து விட்டது. ஓரட்டிக்கு ஆசை பட்டால் கூட கிடைக்காத நிலையில் அனைவரும் மறந்து விட்டனர். இந்த நிலையில் தெற்கு தெருவில் வசிக்கும் டிரைவர் அபூபக்கர் அவர்கள் சமீபத்தில் இறந்துவிட்டார்கள் அவர்களின் நினைவாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று முத்துப்பேட்டை குத்பா பள்ளிவாசலில் ஜிம்மா தொழுகை முடிந்ததும் அனைவருக்கும் ஓரட்டிகளை அவரது குடும்பத்தினர் வழங்கினார்கள், இதனை அனைவரும் ஆச்சிரியத்துடன் பார்த்து வாங்கி சாப்பிட்டனர். இதனால் பழமை திரும்பிய மகிழ்ச்சியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here