பிப்ரவரி 22: முத்துப்பேட்டை பட்டரை குளத்தை மீண்டும் அளவீடு செய்து ஏமார்ந்த பேரூராட்சி நிர்வாகம்.
முத்துப்பேட்டை பட்டாரை குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதி மன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குளம் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டுப்பிடிக்கப்பட்டு அவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் நோடீஸ் அனுப்பியது.
இதில் 20-ம் மேற்பட்ட துப்புரவு தொழிலாளிகளின் வீடுகள் முழுவதும் அகற்றும் நிலமை ஏற்பட்டது. இதனையடுத்து சமீபத்தில் துப்புரவு தொழிலாளிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுப்பட்டனர். மேலும் தமிழ்நாடு குரவர்கள் சங்கம் சார்பில் கடந்த வாரம் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. இதில் திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், செயல் அலுவலர் சித்தி விநாயக மூர்த்தி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் குளத்தை மீண்டும் அளவீடு செய்து அதே பகுதியில் துப்புரவு தொழிலாளிகள் நிரந்தரமாக வசிக்க முடிவு செய்யப்படும் என்று உறுதி அளித்தனர்.
அதன் படி நேற்று காலை மாவட்ட முதன்மை சர்வேயர் தேவராஜன், பிர்கா சர்வேயர் அண்ணாத்துரை, கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் குமார், உதவியாளர்கள் சங்கர், திருமாவளவன், பேரூராட்சி அதிகாரிகள் ராஜப்பா, வீரமணி, ஆகியோர் கொண்ட குழுவினர் குளம் முழுவதும் அளவீடு செய்தனர். இதில் துப்புரவு தொழிலாளிகளின் வீடுகள் முழுவதும் குளத்தின் ஆக்கிரமிப்பில் தான் உள்ளது என்று மீண்டும் உறுதி செய்யப்பட்டது. இதனால் துப்புரவு தொழிலாளிகளின் வீடுகள் கண்டிப்பாக அகற்றப்படும் என்று தெரிந்ததால் முத்துப்பேட்டையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல்: நிருபர் மு.முகைதீன் பிச்சை
No comments:
Post a Comment