பிப்ரவரி 01: முத்துப்பேட்டையில் அனுமதி இன்றி ஆர்பாட்டம் நடத்திய 50 பேர் மீது வழக்கு.
முத்துப்பேட்டையில் அனுமதி இன்றி ஆர்பாட்டம் செய்ததாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் 50 பேர் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
கோட்சேவுக்கு சிலை வைக்கப்போவதாக வெளியான அறிவிப்பை கண்டித்து முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முத்துப்பேட்டை போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அனுமதி இன்றி ஆர்ப்படாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்திற்கு கட்சி மாவட்ட செயலாளர் நைனா முகமது தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது கோட்சே உருவப்படம் தீ வைத்து எரிக்கப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததை தொடர்ந்து, முத்துப்பேட்டை போலீசார் எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட செயலாளர் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment