துபாயிலிருந்து சென்னைக்கு புதிய (FLY DUBAI) பட்ஜெட் விமான சேவை ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 11

துபாயிலிருந்து சென்னைக்கு புதிய (FLY DUBAI) பட்ஜெட் விமான சேவை !



டிசம்பர் 11: துபாய் அரசுக்கு சொந்தமான (FLY DUBAI) "ஃபிளை துபாய்" பட்ஜெட் விமான சேவை நிறுவனம் எதிர்வரும் 31.03.2015 முதல் சென்னை – துபாய் இடையே விமான போக்குவரத்தை துவக்கவுள்ளது
துபாய் – சென்னை வான்வழித்தடத்தையும் சேர்த்து 46 நாடுகளில் தனது 89வது சேவையை விரிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 43 போயிங் 737-800 ரக விமானங்களை கொண்டு இந்நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது.
எக்ஸ்பிரஸ் உட்பட ஏர் இந்தியாவின் சேவைகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி வரும் நிலையில் இன்னொரு நாட்டின் அரசு நிறுவனம் தனது விமான எல்லைகளை விரிவுபடுத்தி வருவது நமது இந்திய அரசின் மெத்தனத்தையும் நிர்வாகக் கோளாறையும் சுட்டிக்காட்டுவதாகவே உள்ளது. ஏற்கனவே, நல்ல நிலையில் இயங்கி வந்த அபுதாபி - திருச்சி இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவையை ஊத்தி மூடியாச்சு என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும், வளைகுடா நாடுகளிலிருந்து திருச்சிக்கு வர ஒன்வே டிக்கெட் விற்கும் விலையில் சென்னை மார்க்கமாக வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிவிடலாம் என்கிற அளவுக்கு டிக்கெட் விலை மிகவும் ஏற்றத்துடன் இருப்பது திருச்சிக்கு வளைகுடா நாடுகளிலிருந்து தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களின் பட்ஜெட் விமான சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.

சென்னையிலிருந்து செல்லும் ஏர் இந்தியா விமான சேவைகள் அனைத்தும் கேரளாவின் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் கட்டாயம் இறங்கி செல்லும் வகையில் மட்டுமே சேவைகளை அறிமுகப்படுத்தும் ஏர் இந்தியா நிறுவனம் ஏன் மதுரை திருச்சி விமான நிலையங்களை இணைத்தோ அல்லது திருச்சியிலிருந்து புறப்பட்டு உங்கள் விருப்ப கேரள விமான நிலையம் வழியாக கூட சேவைகளை அறிமுகப்படுத்தலாமே.

இதன் பயனாக ஏர் ஏசியா, டைகர் ஏர், மலிண்டோ ஏர், ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் போன்ற விமானங்கள் மூலம் திருச்சி வழியாக வளைகுடா நாடுகளுக்கு செல்ல விரும்பும் மலேசிய, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்காசிய டிரான்ஸிட் பயணிகளுக்கு வான்வழி சேவையை வழங்க முடியுமே. (ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இதை தான் கொழும்பு மார்க்கமாக செய்து கொண்டுள்ளதை கவனத்தில் கொள்க) இத்திட்டம் வெற்றிபெற்றால் இந்திய விமான நிறுவனங்களின் திருச்சி மார்க்க தென்கிழக்காசிய சேவைகளை பிலிப்பைன்ஸ் வரை விரிவுபடுத்த முடியும்.

அன்னியச் செலாவணியை நம் தேசத்திற்கு அள்ளித் தருபவர்கள் சார்பாக ஏக்கத்தை எழுதியாச்சு, அக்கறையுள்ள அதிகாரமுள்ள புண்ணியவான் யார் கண்ணிலாவது படுகிறதான்னு பார்ப்போம்!

அதிரை அமீன்

தகவல்: அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here