துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் ''மிராக்கிள் கார்டன்'' பூங்கா!! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 7

துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் ''மிராக்கிள் கார்டன்'' பூங்கா!!











டிசம்பர் 07: துபாயில் பெரிய ஆறுகளோ ,தொடர்ச்சியான மழையோ இல்லையென்றாலும் இயற்கை ஆர்வத்தோடு முயற்சிகள் பல மேற்கொண்டு இது குளிர் பிரதேசமா என நினைக்க செய்யும் வகையில் மரம் செடிகளோடு தோட்டங்களை உருவாக்குகின்றனர் இந்நிலையில் சென்ற வருடம் சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் 45 மில்லியன் பூக்களைக்கொண்டு மிராக்கிள் கார்டன் என்ற பெயரில் பிரம்மாண்ட பூந்தோட்டம் உருவாக்கப்பட்டு சென்ற வருடம் மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பூக்கள் கொண்டு வரப்பட்டு இப்பூங்கா அமைக்கபட்டது . லட்சக்கணக்கான மக்கள் இப்பூங்காவிற்கு வருகை தந்து பூக்களை ரசித்து சென்றனர். கோடை காலத்தையோட்டி தற்காலிகமாக ஜூன் மாதம் மூடப்பட்ட இப்பூங்கா குளிர் காலமான டிசம்பர் மாதத்தையோட்டி தற்போது மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில் உலகின் உயர்ந்த கட்டிடம்,கார்கள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூக்களை காண குவிந்து வருகின்றனர்.

விரைவில் அங்கு ஆயிரக்கணக்கான வண்ண ,வண்ண வண்ணத்தி பூச்சிகளை கொண்ட பட்டர்பிளை பூங்காவும் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Timings
9am – 9pm: weekdays


9am – 11pm: weekends (Friday and Saturday)
Rates

Regular Admission (30 AED)

Disabled (Free)

3 yrs old and below (Free)
06

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here