டிசம்பர் 07: திருவாரூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை பெயர் பதிவு செய்யும் பணி தொடக்கம்.
திருவாரூர் மாவட்ட கலெக்டர் மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது:-
தேசிய மக்கள் தொகை கணக் கெடுப்பு பதிவேட்டினை அடிப்படையாக கொண்டு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக 7 தாசில்தார் அலுவலகங்கள், 4 நகராட்சி அலுவலங்களில் நிலையான மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர் கிராமங்கள் மற்றும் உள்வட்ட தலைமை இடங்களில் நடத்தப்பட்ட முதல் சுற்று, 2-ம் சுற்று முகாம்களின் போது உடற்கூறு பதிவு செய்யாதவர்கள் தங்கள் குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் மற்றும் 2010-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேட்டின் ரசீது நகல் ஆகியவற்றுடன் தாசில்தார், நகராட்சி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டை நிலையான மையங்களுக்கு சென்று பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment