முத்துப்பேட்டையில் கனமழையால் மரங்கள் சாய்ந்தன. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Monday, December 29

முத்துப்பேட்டையில் கனமழையால் மரங்கள் சாய்ந்தன.


டிசம்பர் 29: முத்துப்பேட்டை பகுதியில் நேற்று அதிகாலை முதல் இரவு வரை விடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் இன்னும் 15 நாட்களில் அறுவடை செய்யும் தயாராக உள்ள நிலையில் நேற்று பெய்த கனமழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நேற்று மாலை ஆலங்காடு கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மிகப்பெரிய புளியமரம் ஒன்று அடியோடு பெயர்ந்து சாலையில் விழுந்தது. இதனால் முத்துப்பேட்டை& திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரத்தை பொதுமக்கள் திரண்டு வெட்டி அப்புறப்படுத்தினர். இது போல இப் பகுதியில் ஏராளமான மரங்கள் காற்றில் விழுந்துள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here