இந்த வருடமும் (2015) புதிய உலக சாதனையை நிகழ்த்த உள்ள துபாய். - BBC

BBC

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 31

இந்த வருடமும் (2015) புதிய உலக சாதனையை நிகழ்த்த உள்ள துபாய்.

டிசம்பர் 31: 2015 புத்தாண்டை வரவேற்க உலகமே கோலாகலமாக தாயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில், புதுமைக்கும் பிரம்மாண்டத்திற்கும் பெயர் போன துபாய் புதிய உலக சாதனை முயற்சியை மேற்கொண்டது. இந்நிகழ்வு பல்வேறு உலக சாதனைகளை தாங்கி நிற்கும் உலகில் உயரமான துபாய் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ள‌ டவுன் டவுனின் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே களை கட்டதொடங்கி இருக்கும் நிலையில் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை வெளிப்புற‌மாக முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சுமார் 32,467 சதுரமீட்டர்கள் பரப்பளவில்
எல்.இ.டி விளக்குகளின் மூலமாக திரை போன்று உருவாக்கப்பட்டு இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளபட்டுள்ளது.

இதற்கு முன்னதாக இந்தோனேசியாவின் தாமான் அங்கேரேக்மாலில் நடந்த இது போன்றமுயற்சியே கின்னஸ் சாதனையாக இருந்தது தற்போதைய இந்த முயற்சி முந்தைய கின்னஸ் சாதனையைவிட 3.75 மடங்கு பரப்பள‌வில் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரம்மாண்டமான இந்த எல்.இ.டி பல்புகளின்அனிவகுப்பு சுமார் 1,00,000 பிராக்கட்டுகளைக் கொண்ட70,000 எல்.இ.டி பல்புகளைக்கொண்டது, இவை அனைத்தும் 55,000 மீட்டர் வயர்களைகொண்டு இணைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு இரவில் எல்.இ.டி பல்புகளால் முழுவதும் அலங்கரிக்க‌பட்ட புர்ஜ்கலீஃபா ட‌வரில் துபாயின் பாரம்பரியம், வளர்ச்சி, சாதனை என அனைத்தும் மிகப்பெரிய மல்டி மீடியா திரை மூலம் பிரம்மாண்டமாக ஜொலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புர்ஜ் கலீஃபா டவர் வாணவேடிக்கைகள், பிரபலமான துபாய் நீரூற்றின் உலக இசைகேற்ற நடன என பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறவுள்ளன.

தகவல்: அதிரை நியூஸ்

குறிப்பு: இந்த வருடமும் (2015) புதிய உலக சாதனையை நிகழ்த்த உள்ள துபாய். நேரடி ஒளிப்பரப்பு நமது முத்துப்பேட்டை .org மற்றும் முத்துப்பேட்டை பிபிசியில் காண தவராதீகள். (இந்திய நேரம் அதிகாலை 1 மணி முதல்) துபாய் நேரம் 11:30pm.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here