முத்துப்பேட்டையில் தேக்கு மரங்களை வெட்டி மாட்டு வண்டிகளில் கடத்தல். - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 6

முத்துப்பேட்டையில் தேக்கு மரங்களை வெட்டி மாட்டு வண்டிகளில் கடத்தல்.


நவம்பர் 06: முத்துப்பேட்டையில் தேக்கு மரங்களை வெட்டி மாட்டு வண்டிகளில் கடத்துவது அதிகரித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் பல இடங்களில் வனத்துறை மூலம் ஏராளமான தேக்கு மரங்கள் வளர்க்கப்படுகிறது. சமீப காலமாக பல பகுதிகளில் மர்ம நபர்கள் தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். பல இடங்களில் வெட்டப்படும் தேக்கு மரங்களை அருகில் உள்ள குளங்களில் மூழ்கடித்து பதுக்கி வைத்து வருவதும், தேவைப்படும் நேரத்தில் அதனை எடுத்து விற்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் உதயமார்த்தாண்டபுரம் நாச்சிக்குளத்தில் ஆற்று கரை ஓரம் இருந்த ஏராளமான தேக்கு மரங்கள் வெட்டி கடத்தி திருடப்பட்டு வந்தது. முத்துப்பேட்டை வனத்துறையினர், தேக்கு மரம் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரைக் கைது செய்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரங்களைப் பறிமுதல் செய்தனர். இருந்தும் பல பகுதிகளில் தொடர்ந்து தேக்கு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருவது முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு சவால் விடும் செயலாக உள்ளது.

மேலும் வீடுகளில் மற்றும் தனியார் தோப்புகளில் வளர்க்கப்படும் தேக்கு மரங்களை வனத் துறை மற்றும் வருவாய் துறை அனுமதி இல்லாமல் வெட்டி விற்பதும் சமீபகாலமாக நடந்து வருகிறது. தேக்கு மரங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மாட்டு வண்டிகள், டிராக் டர், வேன், லாரி போன்ற வாகனங்களில் ஏற்றி அடிக்கடி முத்துப்பேட்டை நகரை வலம் வருகிறது.

இதனை வனத்துறையினர் கண்டு கொள்வது கிடையாது. முறைப்படி வெட்டப்பட்ட தேக்கு மரத்துண்டகளாக இருந்தால், மரங்களில் அடையாளம் எழுதப்பட்டிருக்கும். அல்லது வாகனம் ஒட்டுபவரிடம் முறையான ஆவணங்கள் இருக்க வேண்டும். ஆனால் இது அனைத்துமே டிரைவர்களிடம் இருப்பது இல்லை. அதனால் வனத்துறைக்கு சொந்தமான தேக்கு மரமா? அல்லது தனியாருக்கு சொந்தமான இடங்களில் அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட தேக்கு மரங்களா? என்பது புரியாத புதிராக உள்ளது.

வனத்துறையினர் சோதனை நடத்தி, முறையின்றி வெட்டி கடத்தப்படும் தேக்கு மரங்களாக இருந்தால் அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here