நவம்பர் 01: முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நேற்று (31-10-2014) முத்துப்பேட்டை கழக உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1974 ஆம் ஆண்டிற்கு முன்னதாக கல்வி பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் தற்போது தொழில் அதிபராகவும், அரசு துறையில் பணி புரிபவராகவும், விவசாயி, அரசியல் பிரமுகர், சமூக ஆர்வலர் என பல்வேறு பொறுப்புகள் வகித்து, பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சி பல நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த முயற்சிக்கு பலனளிக்கும் விதத்தில் 31-10-2014 சந்திப்பு நடைபெற்றது.
இன்றைய சந்திப்பில் ஒருவருக்கொருவர் கட்டிதழுவி தங்களின் வாழ்த்துகளையும் அன்பையும் பரிமாறிகொண்டனர். பள்ளி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஒவ்வொன்றாக பேசியது பார்ப்போர் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இந்த சந்திப்பு ஆண்டு தோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற ஆவலை கலந்து கொண்ட அனைவரும் தெரிவித்தனர். மக்கள் பொதுநல தொண்டு புரிவது குறித்தும், கல்வி பணி ஆற்றுவது குறித்தும் பேசப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை முத்துப்பேட்டை தமிழ் இலக்கிய மன்ற செயலாளர் நா. இராசமோகன், முத்துப்பேட்டை சமூக ஆர்வலர்கள் KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா ஈனா), கதர் சம்பந்தம் ஆகியோர் செய்து இருந்தனர். வெளியூர் மற்றும் வெளி நாடுகளில் வாழும் முன்னாள் மாணவர்கள் பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சந்திப்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறினார்.
தகவல்: KSH சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
No comments:
Post a Comment