நவம்பர் 12:முத்துப்பேட்டை பேரூராட் சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செ ய்து வருகிறது. புதிய பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் டேங்கில் ஆசாத்நகர், பழைய பேருந்து நிலையம் போன்ற பகுதிகளுக்கு குடி நீர் வினியோகம் செய்யப்படுகிறது. அது போல் அரசக்குளம் அருகில் உள்ள குடிநீர் டேங்கிலிருந்து பெரிய கடைத் தெரு முதல் பேட்டை வரை வினியோகம் செய்யப்படுகிறது. இந் நிலையில் தற்போது முத்துப்பேட்டை நகரில் பெரும்பாலான குளங்கள் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போனதால் நிலத்தடி நீர் இல்லாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடு களில் உள்ள அடிபைப் மற்றும் போர் களில் தண் ணீர் இன்றி மக்கள் தண்ணீருக்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டு ள்ளது. இந் நிலையில் பேரூராட்சி நிர்வாகம் வினியோகிக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பெரும் குளறுபடி இருப்பதாலும், பலரும் குடிநீரைத் தேவை யற்ற பணிக்கு பயன்படுத்துவதாலும், செம்படவன் காடு உட்பட சில இடங்க ளில் பொது குடி நீரை தோப்புகளின் மரங்களுக்கு பயன்படுத்துவதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தின மும் வினியோகிக்க வேண் டிய குடிநீர் 2 நாளுக்கு ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலானோர் காசுக்கு குடிநீரை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள குடிநீர் டேங்கின் அடிப்பகுதியில் உள்ள குழாயை அங்குள்ள பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால் குழாய் தானாக திறந்து சுமார் 5 லட்சம் லிட்டருக்கு மேல் குடிநீர் கழிவு நீர் வடிக்காலில் ஓடி வீணானது. பல மணி நேரம் இப்படி விரயமாகி குடிநீர் தொட்டியிலிருந்த மொத்த நீரும் காலியானது.
இது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment