நவம்பர் 11: பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெற முடியும் என்ற நிலையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது இனி பாஸ்போர்ட் பெற ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக கருதப்படும். வெளியுறவுத் துறை அமைச்சகம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இனி பாஸ்போர்ட் வழங்க ஆதார் அட்டையை மத்திய அரசு கட்டாயமாக்குகிறது. இது குறித்த நடவடிக்கைகளில் யுஐடிஏஐ-யுடன் சேர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இந்த பணி இம்மாத இறுதியில் நிறைவடையும். பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்பவரிடம் ஆதார் அட்டை இல்லை என்றால் அவர் அதற்காக விண்ணப்பித்துள்ள எண்ணை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம் செய்பவர்களின் குற்றப் பின்னணி குறித்து சரிபார்க்கும் பணியில் தேசிய குற்ற ஆவண காப்பகம் ஈடுபடுத்தப்படும். பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கலந்து கொண்ட கூட்டத்தில் காவல் துறை ஆய்வறிக்கையால் பாஸ்போர்ட் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தேசிய குற்ற ஆவண காப்பகம் குற்றம் பற்றிய தகவல்களை தனது டேட்டாபேஸில் ஏற்றி வருகிறது. இந்த பணி முடிய இன்னும் 2 மாதங்கள் ஆகும். அதன் பிறகு குற்ற விவரங்கள் அவ்வப்போது பதிவு செய்யப்பட்டு அவற்றை பாஸ்போர்ட் அலுவலகம் தெரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்யப்படுகிறது. இதனால் குற்றப் பின்னணி குறித்து ஆய்வு செய்ய காலதாமதம் ஆகாது. இத்தனை நாட்கள் ஆதார் அட்டை மூலமும் பாஸ்போர்ட் பெறலாம். ஆனால் இனி ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் பெற முடியும்.
No comments:
Post a Comment