துபாயில் உணவை வீணடித்தால் அபராதம் விதிக்கும் இந்தியரின் உணவகம்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Tuesday, October 21

துபாயில் உணவை வீணடித்தால் அபராதம் விதிக்கும் இந்தியரின் உணவகம்!




அக்டோபர் 21: உண்ணுவதற்கு ஒரு வேளை கூட உணவில்லாமல் பட்டினியால் உயிரை விடும் மனித உயிர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டதுண்டு.

அதே நேரம் தேவைக்கு அதிகமாக உணவை தயாரித்து முழுமையாக உண்ணாமல் அவற்றை குப்பைத் தொட்டிகளில் வீசி எறிவதையும் நாம் கண்டு வருகிறோம்.உலகமயமாக்கல் திட்டத்தை உயர்த்திப் பிடிக்கும் நாடுகளில் உணவை வீணடிக்கும் காட்சிகள் அதிகமதிகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

உலக சாதனைகள் படைப்பதில் முன்னணியில் இருக்கும் நகரங்களில் ஒன்றான வளைகுடாவின் துபை நகரில் உணவு வீணடிக்கப்படுவதை தடுக்கும் முயற்சியில் சத்தமில்லாமல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது ஒரு உணவகம்.

துபை நகரின் கராமா எனும் இடத்தில் இந்திய பிரஜைக்கு சொந்தமான அஜந்தா ரெஸ்டாரன்ட் என்ற உணவகம் இயங்கி வருகிறது..


விரும்பும் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்…

எடுத்த உணவை உண்ணுங்கள்…

இந்த வாசகம் அந்த உணவகத்தின் சுவற்றில் காணப்படுகிறது.

இங்கே ஒரு சாப்பாட்டின் விலை 15 திர்ஹம்(சுமார் 250 ரூபாய்).வாங்கிய அந்த சாப்பாட்டை முழுமையாக சாப்பிடாமல் வீணடித்தால்.. 13 திர்ஹம் (சுமார் 210 ரூபாய்) அபராதம் விதிக்கிறார்கள்.

கல்லா நிரம்பினால் போதும்.. வந்தவன் சாப்பிட்டால் என்ன தூக்கி வீசினால் என்ன என்று அக்கறை இல்லாமல் இருக்கும் உணவகங்களுக்கு மத்தியில் அந்நிய மண்ணில் இப்படி சமூகப் பொறுப்புடன் நடக்கும் இந்தியர் நிச்சயம் பாராட்டப் பட வேண்டியவர்…!



தகவல்: வீகளத்தூர்.in

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here