ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு அதிமுகவினர் 4 பேர் தீக்குளிக்க முயற்சி ! முத்துப்பேட்டையில் பரபரப்பு ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, October 9

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுப்பு அதிமுகவினர் 4 பேர் தீக்குளிக்க முயற்சி ! முத்துப்பேட்டையில் பரபரப்பு !


ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால் முத்துப்பேட்டையில் அதிமுகவினர் 4 பேர் தீக்குளிக்க முயன்றனர். 


சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் சிறை யில் உள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. மாலை 5 மணியளவில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு ஒரு காரில் வந்து இறங்கிய அதிமுகவை சேர்ந்த கோழி.பாலு, கோவிலூர் சங்கரன் ஆகியோர் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு கோஷம் எழுப்பினர். இதனை கண்ட கூட்டுறவு வங்கி இயக்குனர் பாலசுப்பிரமனியன், இளைஞரணி நிர்வாகி ஆலங்காடு சக்திவேல் ஆகியோரும் தங்களது உடம்பில் மண்ணெண் ணெய் ஊற்றிக்கொண்டனர்.

இதைப்பார்த்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலீசார் 4 பேரையும் மடக்கி பிடித்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் 4 பேரையும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here