இந்தியாவில் 2007-2013களில் 2 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, October 19

இந்தியாவில் 2007-2013களில் 2 லட்சம் குழந்தைகளைக் காணவில்லை மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன?


அக்டோபர் 19: இலட்சக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க மாநில அர சுகள் எடுத்த நடவடிக்கை கள் குறித்து வினா எழுப் பியுள்ளது உச்சநீதிமன்றம்.

தினசரி காணாமல் போகும் ஆயிரக்கணக் கான குழந்தைகள். வழி பாட்டுத்தலங்களிலும், ரயில்வேயிலும் பிச்சை எடுக்கும் குழந்தைகள் குறித்து சமூக ஆர்வலர் கள் கவலை அடைகின் றனர்.

குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான புகார்கள் அதிகம் வருவது குறித்து தன்னார்வத்தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனு தொடர்பான விசாரணையை மேற்கொண்ட நீதிமன்றம். இச்சம்பவம் தொடர்பாக பிகார்,  மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் ஆணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது.  அதில் இதுவரை காணாமல் போன குழந்தைகள் தொடர்பாக கொடுத்த புகாருக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்க குழு அமைக்கப்பட்டதா? நடவடிக்கைகளின் மூலம் எத்தனைக் குழந்தைகள் மீட்கப்பட்டனர்? என 30 அக்டோபருக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு அந்த ஆணையில் கூறப்பட்டது. இது தொடர்பாக அந்த தன்னார்வத் தொண்டு அமைப்பின் வழக்குஅறிஞர் புவன்ரித்து என்பவர் கூறும் போது கடந்த ஆண்டு மே மாதம் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பான வழக்கில் விசாரணை செய்த நீதிமன்றம் குழந்தைகள் காணாமல் போனதாக புகார் வந்த காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தயார் செய்ய வேண்டும். முக்கிய காவல்நிலையங்களில் இதற்காக சிறப்புக் காவலர்களை நியமிக்கவேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு மாநில காவல்துறையும் குழந்தைகள் காணாமல் போவது தொடர்பான புகாரை எடுத்துக்கொள்வதே இல்லை. குழந்தைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் புகாரைச் சரியாக கையாள்வதில்லை; அவற்றை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்யாமல் ஒரு மாதம் தேடிப்பாருங்கள்; பிறகு வந்து புகார் கொடுங்கள் என்று அலட்சியமான பதிலே வடக்கில் உள்ள பெரும்பாலான மாநிலத்தில் காவல்நிலையத்தில் இருந்து கிடைக்கிறது. பிகாரில் மாத்திரம் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து 621 குழந்தைகள் காணாமல் போய் விட்டனர்.

2 லட்சத்திற்கும் மேல்...

வடமாநிலங்களில் 5 மாதக் குழந்தை முதல் 15 வயது சிறுவர்கள் வரை காணாமல் போவது அதிகரித்து வருகிறது, 2007-லிருந்து எடுக்கப்பட்ட தகவலின் படி இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் பற்றிய தகவல் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நாளுக்கு நாள் காணாமல் போகும் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரிய செய்தியாக உள்ளது.

பெரும்பாலான குழந்தைகள் ரயிலில் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படு கிறார்கள். ரயில்வே நிர்வாகம் குழந்தைகள் பிச்சை எடுப்பதைத் தடை செய்ய சரியான வழிமுறைகளைச் செய்யவில்லை.

கோயில்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகள்

நாட்டில் உள்ள முக்கிய வழிபாட்டுத்தலங்களில் குழந்தைகள் பிச்சை எடுக்க பயன்படுத்தப் படுகிறார்கள். ரயில்வே துறையிலும் வழிபாட்டுத் தலங்களிலும் சில சமூக விரோதிகள் குழந்தைகளை வைத்துப் பிச்சை எடுப்பவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இச்சமூகவிரோதிகளுக்கு வழிபாட்டுத்தலத்தில் உள்ள சில நிர்வாகிகளும். ரயில்வேதுறையில் உள்ளவர்களும் உடந்தையாக இருப்பதால் சமூக ஆர்வலர்கள் மீட்பு நட வடிக்கை எடுக்க இயலாத நிலையில் இருக்கிறோம். மேலும் குழந்தை கடத்துபவர்கள் தொடர் பான புகார் குறித்து சரியாக தகவலை பொது மக்களும் தொடர்புடைய நிர்வாகத்தினரும் தர மறுப்பதால் காவல்துறையினருக்குக் காணாமல் போன குழந்தைகள் தொடர்பான புகாரை புலனாய்வு செய்வதில் பின்னடைவு ஏற்படுகிறது என்று வழக்குரைஞர் புவன் ரித்து கூறினார்.

இது குறித்து பிகார் மாநில காவல்துறை ஆணையர் கூறியதாவது நீதிமன்றத்தின் ஆணையை நாங்கள் பின்பற்றிவருகிறோம் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க புதிய குழு ஒன்றை நியமித்து இருக்கிறோம். இது தொடர்பாக அருகில் உள்ள மாநில காவல் துறையினருடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான விவகாரத்தில் புகார் கொடுத்தவர்கள் குழந்தை கிடைத்து விட்டால் எங்களுக்குத் தெரிவிப்பதில்லை இதனால் காணாமல் போவோர்கள் தொடர்பான சரியான எண்ணிக்கையைத் தருவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. வசிப்பிடங்கள் மற்றும் சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பது தொடர் கண் காணிப்பினால் குறைந்து விட்டது. என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here