பள்ளி வேன் ஆற்றில் கவிழ்ந்தது ! 17 மாணவர்கள் உயிர் தப்பினர் ! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Friday, October 10

பள்ளி வேன் ஆற்றில் கவிழ்ந்தது ! 17 மாணவர்கள் உயிர் தப்பினர் !

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே செவ்வாய்க்கிழமை பள்ளி வேன் சாலையோரம் முள்ளியாற்றில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக வேனில் பயணம் செய்த 17 மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்.
திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் 18 பேரை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் வேன் திருத்துறைப்பூண்டி- வேதாரண்யம் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தது. வேனை பிச்சன்கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த சபரிராஜா ஓட்டினார்.
மேலமருதூர் கிராமத்தில் ஒரு மாணவரை இறக்கிவிட்டு வேனை எடுத்தபோது, அது சாலையோரம் இருந்த முள்ளியாற்றில் இறங்கியது. எனினும், வேனில் பயணம் செய்த 17 மாணவ, மாணவிகளும் காயமின்றி தப்பினர்.
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here