திருவாரூரில் வியாழக்கிழமை மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மதியம் லேசான மழையும், புதன்கிழமை திருத்துறைப்பூண்டியில் பலத்த மழையும், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. வியாழக்கிழமை காலையில் அதிக வெயில் இன்றி மிதமான வகையில் குளிர்ந்த காற்று வீசியது.
மதிய வேளையில் வெயில் சற்று அதிகமானபோது, மாலை 4 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. இதேபோல், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குடவாசலில் 25.40 மில்லி மீட்டர் மழை: மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: குடவாசல் - 25.40, நீடாமங்கலம் - 23.20, திருத்துறைப்பூண்டி - 8.20, நன்னிலம் - 5.20, வலங்கைமான் - 2.20, முத்துப்பேட்டை 1.

No comments:
Post a Comment