முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி" - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Sunday, January 5

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி"









ஜனவரி 05: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி” 31.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் மாலிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக Dr.K.இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் அக்சஸ் இந்தியாவின் ஆராய்ச்சியாளர் முகைதீன் மற்றும் கனி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட Dr.இளங்கோ அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.


No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here