முத்துப்பேட்டை அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்தவரை போலீசார் கைது செய்தது. - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Saturday, December 21

முத்துப்பேட்டை அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்தவரை போலீசார் கைது செய்தது.


டிசம்பர் 21: முத்துப்பேட்டை அருகே வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரித்த வரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவான்ஓடை மேலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது50). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உரிமம் பெற்று நாட்டு வெடி தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். மதியழகன் தொழில் செய்து வந்த இடத்தில் தீ விபத்து நடந்தது. இதில் 2 பேர் இறந்ததை தொடர்ந்து அவ ருடைய உரிமம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் மதியழகன் மீண்டும் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபடுவதாக போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. இதன்படி முத்துப் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் காந்திகண்ணா மற்றும் போலீசார் மதியழ கனின் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் வீட்டு பின்புறம் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடி மருந்து, நாட்டு வெடி செய்ய பயன்படும் உபகரணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீ சார் மதியழகனை போலீசார் கைது செய்து திருத் துறைப்பூண்டி சப்- மாஜிஸ் திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here