டிசம்பர் 21: முத்துப்பேட்டை குண்டாங்குளத் தெரு S.ஹாஜா நஜுமுதீன் அவர்களின் தகப்பனாரும், M. இமாம்தீன் அவர்களின் மாமனாரும், M.முஹைதீன் பிச்சை அவர்களின் சகளையும், முஹம்மது முஹைதீன், முஹம்மது சித்திக் ஆகியோர்களின் மச்சானுமாகிய "சௌக்கத் அலி" அவர்கள் நேற்று 20.12.2013 வெள்ளிக் கிழமை மாலை 3 மணியளவில், மௌத்தாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்……..
அன்னாரின் ஜனாஸா இன்று 21.12.2013 சனிக் கிழமை காலை 10 மணியளவில் கொத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக……ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள்,மற்றும் நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக…ஆமீன்.
தகவல்: முத்துப்பேட்டை நியூஸ்

No comments:
Post a Comment