விரைவில் வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசா அறிமுகம்! - BBC

BBC


Post Top Ad

Responsive Ads Here

Thursday, December 26

விரைவில் வளைகுடா நாடுகளுக்கு ஒரே விசா அறிமுகம்!




டிசம்பர் 26: ஐரோப்பாவில் உள்ளதை போன்று அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் ஒரே விசாவை கொண்டு வரும் ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவூதியிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தை போல் அனைத்து வளைகுடா நாடுகளுக்கும் பொதுவான விசா ஒன்றை கொண்டு வருவதற்கான பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் அதிகாரிகள் மட்டத்தில் நடப்பதாக தெரிகிறது.

தற்போது சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் ஆகிய நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தாங்கள் பணிபுரியும் நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்ல வேண்டுமாயின் தனி விசா பெற்றே செல்ல வேண்டும். இச்சூழலில் பொதுவான விசா கொண்டு வருவது வளைகுடாவில் வசிக்கும் வெளிநாட்டினருக்கு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

வளைகுடாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 31 சதவிகிதத்தினர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான விசா அமல்படுத்தப்பட்டால் வர்த்தகம் வளர்ச்சியுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஏதேனும் ஒரு நாட்டில் வெளிநாட்டவர் யாருக்கேனும் தடை விதிக்கப்பட்டால் ஒட்டு மொத்த வளைகுடா நாடுகளிலும் அது எதிரொலிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here