டிசம்பர் 26: முத்துப்பேட்டை கீழநம்மங்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மங்களுர், கீழநம்மங்குறிச்சி, பெத்வேளான்கோட்டகம் இணைப்பு சாலை செம்படவான்காடு மில்லடியில் இருந்து கடந்த 13 ஆண்டுகாலமாக செப்பனிடப்படவில்லை. ECR ரோடு வேலைகள் துவங்கும் போது மற்றும் முத்துப்பேட்டையில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படும்போது இந்த வழியாகத்தான் போக்குவரத்து மாற்றப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இந்த இதை பல முறை சம்மந்தபட்ட அதிகாரியிடம் எடுத்துரைத்தும் எந்த பயனும் இல்லை. இதை கண்டித்து 26-12-2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் முத்துப்பேட்டை ECR ரோடு மில்லடி பஸ் நிறுத்தத்தில் அனைத்து கிராம மக்கள் சார்பாக சாலை மறியல் நடைபெற்றது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புகைப்படம்: முத்துப்பேட்டை குரல்







No comments:
Post a Comment